வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வி! August 22, 2019

Image
ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், முதல் தேர்வு கடந்த ஜூன் 8-ம் தேதியும், இரண்டாம் தேர்வு ஜூன் 9ம் தேதியும் நடந்தன. தமிழகம் முழுவதும் 1,081 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். 
முதல் தாளின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 0.08 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் விவரம் வரும் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

credit ns7.tv