இந்தியா-அமெரிக்கா கடலோர காவல் படையினர் இணைந்து சென்னை அருகே இன்று முதல் 5 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
வரும் 27ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் ஸ்ட்ராட்டன் கடலோர காவல்படை கப்பல், சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதனையடுத்து, அமெரிக்க கப்பற்படை வீரர்களுக்கு, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி பரமேஸ்வரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை அருகே நடுக்கடலில் நடைபெறும் பயிற்சியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பலான சவுரியா மற்றும் 2 சிறிய கப்பல்கள் பங்கேற்கவுள்ளது. இருநாடுகள் இடையேயான கூட்டுபயிற்சியின் போது, இரு நாட்டினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய உத்திகள், தகவல் பரிமாற்றம், கலந்துரையாடல், உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது.
credit ns7.tv