வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

Image
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், திருவாரூர் கடைமடை பகுதிக்கு வந்து சேராததையடுத்து, விவசாயிகள் ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
கடந்த 13 ஆம் தேதி மேட்டூரில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சம்பா சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லணை வந்து சேர்ந்த நீரை, கடந்த 23ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், திருவாரூர் கடைமடை பகுதிகளுக்கு எட்டு தினங்களில் இருந்து பத்து தினங்களுக்குள் தண்ணீர் வந்து சேரும் நிலையில், இதுவரை தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.  
ஆறுகளின் குறுக்கே பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக என விவசாயிகள் குறை கூறினர். இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், மாங்குடி பாண்டவையாற்றில் உள்ள கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  ஆற்றின் மேம்பால பணிகளை நிறுத்தி பாசனத்திற்கு தண்ணீரை உடனடியாக திறக்காவிட்டால், அடுத்தகட்டமாக சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

credit ns7.tv