ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட்சி...! August 18, 2019

Image
ஈரோடு நாணயவியல் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். 
சத்தி சாலையில் உள்ள தனியார்  மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், பழங்கால  நாணயங்கள்,  தபால் தலைகள், கடலில் கிடைத்த பழமையான கல்மரம், நத்தை, சங்கு, மரப்பாச்சி, மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், இதய துடிப்பை கணக்கிட்ட கருவி, எடைகல், புகை பிடிப்பான், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
மேலும் கொடு மணலில் கண்டெடுக்கப்பட்ட வாணிப மாற்று பொருட்கள், மன்னர்கள் வழங்கிய பொற்காசு, டேனிஷ், பிரெஞ்சு, போர்ச்சுக்கள், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட,192 நாடுகளின் நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கணடுகளித்து வருகின்றனர்.

credit ns7.tv