மணிக்கு 280.5 கிமீ வேகத்தில் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர்.
இங்கிலாந்தின் North Yorkshireல் உள்ள Elvington விமான தளத்தில் உள்ள 2 மைல் தூர ஓடுபாதையில் கடந்த சனிக்கிழமை இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. Essex மாகாணத்தின் Little Horkesley பகுதியைச் சேர்ந்த 45 வயதான Neil Campbell என்பவர் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிளை மணிக்கு 174 மைல் (280.55 கிமீ) வேகத்தில் செலுத்தினார். இது ஒரு புதிய உலக சாதனையாகும்.
முன்னதாக 1995ம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த Fred Rompelberg 268.8 கிமீ வேகத்தில் சைக்கிளை செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது. இதனை தற்போது Neil Campbell முறியடித்துள்ளார். இச்சாதனையை படைத்த சைக்கிள் 13 லட்ச ரூபாயில் விஷேசமாக தயாரிக்கப்பட்டதாகும்.
விரைவிலேயே அமெரிக்காவின் Utah நகரிலுள்ள 6 மைல் நீளம் கொண்ட Bonneville Salt Flats ஓடுதளத்தில் தற்போது படைக்கப்பட்ட சாதனையை தகர்க்கப்போவதாக Neil Campbell தெரிவித்துள்ளார். அப்போது மணிக்கு 220 மைல் வேகத்தில் சைக்கிளை செலுத்தப்போவதாகவும், 2 மைல் நீளம் கொண்ட Elvington ஓடுபாதையில் இந்த சாதனையை படைக்க போதுமான நீளம் இல்லை என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv