ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள் அடிக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ டிஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விடிய விடிய சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.
முக்கியமான 7 கேள்விகள்...
➤ வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட போதும் விசாரணைக்கு ஆஜராகதது ஏன்? முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகு எங்கு சென்றீர்கள்?
➤ இந்திராணி முகர்ஜியையும், அவரின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியையும் எப்படி தெரியும், யார் மூலம் அறிமுகம் அறிமுகமானார்கள்?
➤ டெல்லி நார்த் பிளாக்கில் இந்திரானி முகர்ஜியை சந்தித்தது உண்மையா? கார்த்தி சிதம்பரத்தை தொடர்புகொள்ளுமாறு இந்திரானி முகர்ஜியிடம் கூறினீர்களா?
➤ தங்கள் பெயரிலும், மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரிலும் எத்தனை போலி நிறுவனங்கள் இருக்கின்றன?
➤ இங்கிலாந்து ஆளுகையின் கீழ் உள்ள தீவுகளில் இருந்து கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றது எதற்காக?
➤ இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
➤ ஸ்பெயினில் பார்சிலோனா டென்னிஸ் கிளப்பை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?
இது போன்ற கேள்விகளை ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர்.
மேலும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட சிதம்பரம் அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றத்திடம் அனுமதி பெறாததால் வீட்டு உணவை சாப்பிட சிதம்பரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிபிஐ அலுவலகத்தின் கேண்டீன் உணவை சாப்பிட மறுத்த சிதம்பரம், இரவு முழுவதும் பட்டினியாக இருந்ததாக கூறப்படுகிறது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் தரைதளத்தில் தங்கியுள்ள சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் இருவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அந்த இடத்தில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
credit ns7.tv