தன்னுடைய அழைப்பை வைத்து ராகுல்காந்தி அரசியல் செய்துவிட்டதாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சத்ய பால் மாலிக், காஷ்மீரில் அமைதியை குலைப்பதற்காக எந்த ஒரு அரசியல்வாதியும் வரவேண்டாம் என முன்கூட்டியே தான் தெளிவுபடுத்திவிட்டதாக கூறியுள்ளார். ராகுல்காந்தி தனது அழைப்பை அரசியலாக்கியதால், அந்த அழைப்பை தான் திருப்ப பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை ஊடகங்களில் தெரிவிப்பதன் மூலம், மாநில நிர்வாகத்திற்கு ராகுல்காந்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருவதகாவும் ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அட்டையை வழங்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக இம்மாதம் 31ம் தேதி பிரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஆதார் அடையாள அட்டையை வழங்கும் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
credit ns7.tv