மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் பகுதியில் பழங்குடி மக்களின் கிராமத்துக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடை ஒன்றில் சிறிது நேரம் பணியாற்றும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கிழக்கு மிட்னாபூர் பகுதிக்கு சென்ற மம்தா பானர்ஜி, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் திகா கிராமத்தில் வாகனத்தை நிறுத்த சொல்லி, மக்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து அங்கிருந்த டீக்கடைக்கு சென்ற அவர், சிறிது நேரம் தாம் தேநீர் போட்டு பார்ப்பதாக கூறிவிட்டு, தேநீர் தயாரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினார்.
Sometimes the little joys in life can make us happy. Making and sharing some nice tea (cha/chai) is one of them. Today, in Duttapur, Digha | কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুরে। #Bangla
413 people are talking about this
இதனை அடுத்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், டீ போடுவது ஒன்றும் புதிதல்ல எனவும் மற்றவர்களைப் போலவே சமையலறையில் பணி செய்யும் பழக்கம் தனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தான் டீ போடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ள மம்தா பேனர்ஜி, சில நேரங்களில் நல்ல டீ போட்டுவிட்டு அதனை மற்றவர்களுக்கு கொடுப்பதில் சந்தோஷம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv