திங்கள், 19 ஆகஸ்ட், 2019

2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...? August 18, 2019

Image
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் விண்கல் ஒன்று பூமியை தாக்க இருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கணித்துள்ளது.
விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் விண்கற்கள் பல அவ்வப்போது பூமியின் புவிவட்டப் பாதைக்கு வந்துவிடும். அப்படி வரும் விண்கற்களை, விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மிக கூர்மையாக கண்காணித்து அது பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிடும்.
News7 Tamil
அந்தவகையில், தற்போது பூமியின் வட்டப்பாதைக்கு வந்திருக்கும் விண்கல் ஒன்று அடுத்த ஆண்டு பூமியை தாக்கும் என நாசா கணித்துள்ளது. 1998 OR2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லின் அசைவுகளை நாசா மிகக்கூர்மையாக கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
1998 OR2 விண்கல் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் நாசா, அந்த விண்கல்  பூமியில் இருந்து 30.9 லட்சம் மைல் தூரத்தில் இருக்கிறது. அதனால், பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் விண்வெளியில், புறக்காரணங்களால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே பூமியை தாக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
News7 Tamil
அப்படியான சாத்தியங்கள் ஏற்பட்டால், 13,500 அடி சுற்றளவு கொண்ட 1998 OR2 என்ற விண்கல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி மாலை 3.26 மணிக்கு பூமியை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து அதிக தொலைவில் இந்த விண்கல் இருந்தாலும், நாசா வெளியிட்டுள்ள இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 credit ns7.tv