வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்! August 23, 2019

Image
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகளில், ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி விழுக்காடு இருந்த நிலையில், இரண்டாம் தாள் தேர்வு முடிவிலும் அதே அவலம் தொடர்ந்துள்ளது. 
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 
இந்த தேர்வின் இரண்டாம் தாள் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதியதில், வெறும் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 90-ஆக நிர்ணயிக்கப்பட்டதில்,  24 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும், 324 பேர் மட்டுமே 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
OMR Sheet-ல் சரியான விடையை அடையாளப்படுத்துவதில், பெரும்பாலான தேர்வர்கள் தவறு செய்துள்ளதால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் இருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv