திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது ஏன்? August 26, 2019

credit ns7.tv
Image
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகளின் அடிப்படையிலேயே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேநேரத்தில், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வரும் Z+ பாதுகாப்பு தொடர்ந்து வழக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SPG பாதுகாப்பு, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
இதனிடையே, மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடக்கலாம் என்பதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதைக் கண்டித்து, சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடக்கலாம் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.