வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

இரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...! August 22, 2019

Image
நியூயார்க்கில் பெண் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஓர் அரிய வகை மீன் அவரது வலையில் சிக்கியது. அந்த மீனின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த புதன் கிழமையன்று, நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள ஏரி ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை எடுத்து பார்த்தபோது அதற்கு இரண்டு வாய் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், அந்த மீனின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
credit ns7.tv