சனி, 24 ஆகஸ்ட், 2019

காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி...! August 24, 2019

Image
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது, 66.
கடந்த சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 9 ஆம் தேதி சுவாசப் பிரச்னைக் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 12.7 மணியளவில் சிகிச்சை பலனின்றி, அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

1980 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அருண் ஜெட்லி, 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிந்தார். 2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். 
மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது தான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார். 
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மரணம், பாஜகவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

credit ns7.tv