புதன், 28 ஆகஸ்ட், 2019

ஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் கண்டனம்!

credit ns7.tv
Image
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ள மனுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் அமைச்சரான Shireen Mazari, கூறுகையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நாவிற்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள மனுவில் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மரணமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கூட காஷ்மீரில் பொதுமக்கள் மரணிப்பதாகவும், தவறானவை அங்கு நடைபெறுவதாகவும் ஒப்புதல் தெரிவித்ததாக பாகிஸ்தான் அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டள்ள அறிக்கையில், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் அகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இங்கு பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகின்றது என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம், இதில் பாகிஸ்தான் அல்லது வேறு எந்த நாடுகளும் தலையிட தேவையில்லை, அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதத்தின் முதன்மை ஆதரவாளர்  என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன், அல்- கொய்தா, தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பாதுகாத்து வருகிறது, இது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டியது கடமை என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.