பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களை அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராட்ஷ்டிர அரசு எடுக்கும் இந்த முயற்சிக்கான தொடக்க விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ராவ்தே உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதீபா பாட்டில், ஓட்டுநர் பயிற்சிக்காக இதுவரை 163 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும். இவர்களுக்கு தற்போது ரயில்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், கூடிய விரைவிலேயே, மகாராஷ்டிராவில் பழங்குடியினப் பெண்கள் ஓட்டுநர்களாக வலம்வருவர் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், அவர்களது பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அதற்கு பின்னர் பேசிய அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் தான் இதுபோன்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஓட்டுநர்களாக பணிபுரியவிருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
பெரும்பாலான பழங்குடியினப் பெண்கள் படிக்க முடியாத இந்த சூழ்நிலையிலும், மகாராஷ்டிரா அரசின் இந்த புதிய முயற்சி மாதர் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
credit ns7.tv