Credit ns7.tv
மூலிகை பொருட்களை பயன்படுத்தி எவ்வித மாசும் இன்றி பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் முறையை சென்னையை சேர்ந்தவர் கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் லயன் இந்தியா ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் கோபிநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டனர். இதனை தடுக்கும் நோக்கில் புதிய உத்தியை உருவாக்கி உள்ளதாகவும், அதன்படி பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை முற்றிலும் சாம்பலாக்கும் நடைமுறையை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்பை வரும் வெள்ளிக்கிழமை பெங்களூரில் நடைபெறும் இந்திய அறிவியல் கருத்தரங்கில் செயல்முறை விளக்கத்தை அளிக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், இந்த திட்டத்தின் செயல்முறை விளக்கத்தையும் செய்து காட்டினர். மேலும் இதனை கண்டுபிடித்த சென்னை திரு.வி.க.நகரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மூன்றாவது வரை படித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.