ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என்ற பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டது. இதேபோல் ஏடிஏம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, அவர்களுடைய செல்போன்களுக்கு ஓடிபி எண்களை அனுப்பவும் ஆலோசனை செய்யப்பட்டது.
கனரா வங்கியில் அமலில் உள்ள இந்த நடைமுறையை அனைத்து வங்கிகளும் விரைவில் கொண்டுவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv