ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்டும் துண்டிப்பு..! August 18, 2019

Image
ஜம்மு பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் செல்போன் இணையதள சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், கடந்த 4ம் தேதி மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் இரு தினங்களுக்கு முன், 2ஜி வேகத்திலான செல்போன் இண்டெர்நெட் சேவை வழங்கப்பட்டது. ஆனால், ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று மீண்டும் செல்போன் இண்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 
தேவையில்லாத வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையிலும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும், ஜம்மு, கத்துவா, உதம்பூர், சம்பா மற்றும் ராசி மாவட்டங்களில், செல்போன் இண்டெர்நெட் சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவருகிறது என எண்ணிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த செய்தி சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

credit ns7.tv

Related Posts: