அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக தம்மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கார்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா உள்ளிட்ட 300 அரசியல் கட்சித் தலைவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், குமாரசாமி மீது இந்த புகாரை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த குமாரசாமி, இந்த விவகாரத்தில் ஊடகங்களால் தான் குறி வைக்கப்படுவதாகக் கூறினார். எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என குமாரசாமி சவால் விடுத்தார்.
credit ns7.tv