செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

தன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு!

Image
தற்போது நிலவிவரும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் நிதியில் இருந்து 1,76,051 கோடி ரூபாயை வழங்க முடிவெடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவின் தன்னிடம் இருக்கும் உபரிநிதியை, அரசுக்கு வழங்குவது தொடர்பாக அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் உபரி நிதியை சிறு சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம் என்றும், இந்த தொகையை 3 லிருந்து 5 ஆண்டுகளுக்கு கொடுத்துவரலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் ரிசர்வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு மத்திய அரசிடம்  வழங்கிய உபரி நிதியை வழங்குவதற்கான அறிக்கையை ஏற்று, மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரிசர்வங்கி வசம் இருக்கும் உபரிதொகையை வழங்குமாறு, அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலிடம் கேட்டதாகவும் அதை வழங்க மறுப்பு தெரிவித்த உர்ஜித் பட்டேல், உடல்நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகினார் என்ற சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது
credit ns7.tv