இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுவதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக கூறப்படும் நிலையில், இதை சமாளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனியார் தொழில் நிறுவனங்கள் யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ள ராஜீவ்குமார், பணத்தை பாதுகாப்பதில் மட்டும் அவர்கள் குறியாக இருப்பதாக கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்ததே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
credit ns7.tv