கேரள மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து, தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி சோதனைச் சாவடியில், அம்மாநில காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில், லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் கேரளாவிற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு, வாளையார், ஆரியங்காவு, அச்சன்கோவில், பாறசாலை உள்ளிட்ட 14 முக்கிய சோதனைச்சாவடிகள் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கடும் சோதனைக்கு பின்பே கேரளாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வருவோர் மட்டுமின்றி, சரக்கு வாகனங்கள், ஆட்டோ, ஜீப் போன்றவையும் சோதனையிடப்படுகின்றன. இரவு பகலாக சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கேரள காவல்துறையினர; தெரிவித்தனர்.
credit ns7.tv