ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இயல்பு நிலை....! August 25, 2019

Image
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டபோதிலும், ஒரு சில பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை 20-வது நாளாக முடங்கியுள்ளது. 
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்முவின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பிராந்தியத்திலும் கடந்த 21-ந் தேதி பல இடங்களில் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கண்டன பேரணிக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்ததால், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன்காரணமாக காஷ்மீர் பிராந்தியம் முழுவதும்  இயல்பு வாழ்க்கை 20 ஆவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  

credit ns7.tv