புதன், 28 ஆகஸ்ட், 2019

பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..!

Image
பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.  
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள வரைவின்படி பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீது, இது மக்கக்கூடியது, இது மறுசுழற்சி செய்யக்கூடியதென அச்சிட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தனிநபர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிளாஸ்டிக்கை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் என்றும், பொது இடத்தில் எரித்தால் 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் கழிவை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிடில் தனிநபருக்கு 100 ரூபாய் முதல், 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி வரைவு வெளியிட்டுள்ளது.

credit ns7.tv