புதன், 28 ஆகஸ்ட், 2019

கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி எவ்வளவு? August 28, 2019


ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாக மத்திய அரசுக்கு அளிக்கவிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி குறித்த விபரங்கள்:
➤2008 இல் 15 ஆயிரத்து 11 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டி. 
➤2009 இல் 25 ஆயிரத்து 9 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2010 இல் 18,759 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2011 இல் 15 ஆயிரத்து 9 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2012 இல் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சகம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2013 இல் 33 ஆயிரத்து 10 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2014 இல் 52, 679 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2015 இல் 65, 896 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2016 இல் 65,876 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2017 இல் 30,659 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.
➤2018 இல் 50 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.
➤2019 இல் 1,76,051 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். 
credit ns7.tv