செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

அபராதம் வசூல்

credit ns7.tv
Image
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,377 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அபராத வசூல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் இந்த பதிலை அளித்துள்ளது.
இதன்படி 2016-2017  ஆண்டில் ரூ.405 கோடியே 30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-2018-ம் ஆண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும் , 2018-2019-ம் ஆண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம்வரை, டிக்கெட் இன்றி பயணம் செய்த 89 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளனர்.