நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிகமாக விமர்சனம் செய்துள்ளார் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவத்திற்கு முப்படைகளின் தலைமைக்கு ஒரே தலைவர் என்பது அவசியமற்ற மாற்றம் எனக் கூறினார். மக்களுக்காக பாடுபடக் கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில், பாஜக தலைவர்கள் என்ன சீர்திருத்தத்தை செய்யப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜக எண்ணம் பலிக்காது எனவும் திருநாவுக்கரசு குறிப்பிட்டார். மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பேசிய திருநாவுக்கரசர், பால் விலை உயர்த்தப்பட்டதால், மக்கள் கடும் பாதிப்பை சந்தித்திருப்பதாக விமர்சித்தார். பொதுமக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களில், அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
credit ns7.tv