ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் விளக்கம்...! August 18, 2019

Image
வாகனங்களின் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 
மாட்டு தீவனங்களின் விலை உயர்ந்து வருவதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், என பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப்பின், பால் விலையை உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு  28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் விலை உயர்த்தப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தெரிவித்ததாகவும், ஊழியர்களின் ஊதியம் உயரும்போது, பால் உற்பத்தியாளர்களின் ஊதியமும் உயர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், கோரிக்கைகளின் அடிப்படையிலேயே பெரிய மாவட்டங்கள் முதலில் பிரிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், விவசாயிகளின் தேவைக்காக மேட்டூரிலிருந்து 7 நாட்கள் கழித்து, கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி கூறினார். 

 credit ns7.tv