ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லியில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் வலியுறுத்த உள்ளன. காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv