வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன? August 22, 2019

credit ns7.tv
Image
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன?
➤மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற அனுமதி அளித்தார் என்பது தான் ப.சிதம்பரம் மீதான முக்கிய குற்றச்சாட்டு.  
➤ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது 2017ல் சிபிஐ ஊழல் வழக்கையும், அமலாக்கப்பரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன. 
➤கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க, நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகியபோது அது நிராகரிக்கப்பபட்டது. 
➤இதனை அடுத்து அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க, ப.சிதம்பரம் அனுமதி தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 
➤அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவ வேண்டும் என சிதம்பரம் கூறியதாக வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்துள்ளார். 
➤இந்நிலையில் வருமான வரி சோதனையில் 305 கோடி ரூபாய் முதலீட்டை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஈர்த்திருந்தது தெரியவந்தது.
➤இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை அணுகிய இந்திராணி முகர்ஜி, மூன்றரை கோடி ரூபாயை அவருக்குச் சொந்தமான ''அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக்'' நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.