உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக கருதப்படும் சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக உள்ளது.
இனம், மொழி கடந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னை தினத்தை சென்னைவாசிகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தாண்டு விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு சென்னைவாசிகள் பலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
credit ns7.tv