ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தை கடந்த ஆண்டு கைது செய்த அமலாக்கத் துறையினர் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கைது செய்யலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரம், தன்னை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. கைது செய்யாமல் இருப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் இருந்தது. இந்த நிலையில் பல மாதங்கள் கழித்து அந்த மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.
credit ns7.tv