நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பருவம் தவறிய மழையால் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 30ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மத்திய அரசு, அதை பதுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைக்கும், டெல்லியில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
credit ns7.tv