ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

credit ns7.tv
Image
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி ஒருவர் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே கொரோனாவால் ஏற்பாட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. சீனாவில் இதனால் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும், சீனாவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன.
சீனாவில் வுஹான் பகுதியில் இருந்து தான் இந்த வைரஸ் பரவ தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கிருந்து பிலிப்பைன்சுக்கு சென்ற சீனாவை சேர்ந்த 44 வயது நபர் உயிரிழந்துள்ளார். சீனாவுக்கு வெளியே கொரோனாவால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.