செவ்வாய், 7 ஜூலை, 2020

ரேஷனில் நவம்பர் வரை விலையில்லாமல் அரிசி!

நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதை போலவே இம்மாதமும் விலையின்றி துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 


இந்த ஆணையை வெளியிடுவதற்கு முன்பு, அதாவது ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய ரேசன் பொருட்களை விலை கொடுத்து பெற்றுள்ளனர். அவ்வாறு பெற்றுள்ள குடும்ப அட்டைத்தாரர்ளுக்கு, அந்த தொகையை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஈடுசெய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட குடும்ப அட்டைத்தாரர்கள் இம்மாதத்திற்கான கூடுதல் அரிசியை நியாய விலைக்கடைகளில் பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசும் நவம்பர் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.