காற்றில் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை திருத்த அழைப்பு விடுத்துள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய், கோவிட்-19 வைரஸ் உள்ள ஒருவர் இருமல் மற்றும் தும்மும்போதும் பேசும்போதும் மூக்கு அல்லது வாயில் இருந்து வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு முதன்மையாக பரவுகிறது என்று உலக சுகாதாரம் நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்த வாரம், ஒரு அறிவியல் இதழில் ஆராய்ச்சியாளர்களால் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, நிறுவனத்திற்கு எழுத்தப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில், 32 நாடுகளில் 239 விஞ்ஞானிகள் சிறிய துகள்கள் மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் இருந்து கருத்து கேட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஒருவர் தும்மிய பிறகு காற்றில் பெரிதாகும் பெரிய நீர்த்துளிகளால் அல்லது ஒரு அறையின் நீளத்தை தாண்டிவிடக் கூடிய மிகச் சிறிய வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளால் எடுத்துச் செல்லப்படும் கொரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது. மேலும், அதனை உள்ளிழுக்கும்போது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், வைரஸ் காற்றில் பறந்ததற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2 மாதங்களில் காற்றுவழி பரவுதல் சாத்தியம் குறித்து பரிசிலித்துவருவதாக நாங்கள் கூறிவருகிறோம். ஆனால், திடமான அல்லது தெளிவான ஆதாரங்களால் நிச்சயமாக ஆதரிக்கப்படவில்லை” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொழில்நுட்ப முன்னணி டாக்டர் பெனிடெட்டா அலெக்ரான்ஸி கூறியதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.