ஞாயிறு, 5 ஜூலை, 2020

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!

சீனாவின் பெயரை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரதமர் மோடி அஞ்சுகிறார் என சொல்லமாட்டேன் என்றும், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? என்றும் அவர் வினவி உள்ளார்.