திங்கள், 6 ஜூலை, 2020

சமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்..

அடுத்த சில மணி நேரங்களில் நீங்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது டிவிட்டர் கணக்குகளை லாக் –இன் செய்யும்போது, சிறியதாக நீங்கள் ஏதோ ஒன்று செய்தாலும் அது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதையும், உங்களை சுற்றி உள்ள பிறரையும் எப்படி பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.”

சமூகவலைதளங்கள் நமது வாழ்க்கையில் ஊடுருவி உள்ளன. இந்த உலகைச் சுற்றிலும், குறிப்பாக இளம் பருவத்தினர் தாங்கள் விழித்திருக்கும் நேரம் எல்லாம் இந்த செயலிகளில்தான் நேரத்தை செலவழிக்கின்றனர். தாங்கள் வாழும் வாழ்க்கையை ஆவணப்படுத்துகின்றனர். சமூகவலைதளங்களின் ஆபத்துகள் எப்போதுமே விவாதிக்கப்படுகின்றன. பாதகமான விளைவுகள் எப்போதுதாவதுதான் விவாதிக்கப்படும். நீங்கள் வீட்டில் இருக்கும் இளம்வயதினராக இருந்தால், அது பற்றி நீங்கள் பேசுவது இயல்பான ஒன்று. ஆனால், நீங்கள் அதைச் செய்வதற்கு முன்பு, நீங்கள் பார்ப்பதற்கான ஒரு சுவாரஸ்யமான TED உரை

சோபி பேஜ் என்ற ஒரு இளம் பெண், சமூக வலைதளங்கள் நல்லது, கெட்டது இரண்டுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார். “பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இளம்பருவத்தினர் தங்களுக்குள் ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதை இது சாதகமாக பாதிக்கிறது. காமன் சென்ஸ் மீடியா நடத்திய ஆய்வின்படி, ஐந்தில் ஒரு இளம் பருவத்தினர், சமூக வலைதளத்துக்குள் பயணிக்கும்போது, மேலும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறி இருக்கின்றனர். ஆனால், சமூக ஊடகம் மோசமானதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. 83 சதவிகித இளம் வயதினர், ஆன்லைனில் யாரோ ஒருவரை கொடூரமாக அல்லது அந்த கொடூரமான நோக்கம் கொண்டவராக பார்த்திருப்பதாகக் கூறி இருக்கின்றனர். 49.5 சதவிகிதம் பேர் இணையவழி மிரட்டலுக்கு ஆளாகி உள்ளனர். 33.7 சதவிகிதத்தினர், ஆன்லைனில் இணைய வழி மிரட்டல் குற்றத்தைச் செய்ததாக கூறி உள்ளனர்,” என்றார்.

“மக்களுடன் தொடர்பில் இருத்தல் , நீண்ட தூர பணி உறவுகள் என்பது உள்ளிட்ட பல நலன்கள் சமூகவலைதளங்களில் உள்ளன. தவிர கல்லூரிகளில், அவர்கள் சாத்தியமான மாணவர்களை தேடும்போது, அவர்களின் சமூக வலைதள கணக்கை பரிசோதித்து, அவர்கள் பற்றி கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொள்கின்றனர்” என்கிறார் சோபி.

மேலும் அவர் கூறுகையில், “மக்கள் இதனை உணராமல் இருக்கலாம். சமூக வலைதளங்கள் பேச்சுவார்த்தைகளை, இயக்கங்களைத் தொடங்க உதவுகின்றன. மக்கள் பேரழிவு அல்லது பகிரப்பட்ட துக்கத்தில் இருக்கும்போது மக்களை கொண்டு வந்து இணைக்கிறது” என்கிறார்.
“நாம் இல்லாமல் கூட சமூக ஊடகம் தெரியும். நமது வீடியோக்கள் பகிரப்படுதல், நமது இடுகைகளுக்கு எத்தனை விருப்பங்கள் கிடைத்திருக்கிறது என்பதில் வெறி கொண்டவராக, நம்மை சுய கவனிப்பாளர்களாக சமூக ஊடகங்கள் மாற்றுகிறது. நம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சுய மதிப்புடன், இதர மக்களையும் திரும்பி பார்க்கின்றோம். அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள் அல்லது இந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் அல்லது இதைப்பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அரிதாக நிகழ்கிறது” என்று சோபி குறிப்பிடுகிறார்.

“சரியான வழியில் சமூக வலைதளங்களை நாம் உபயோகிக்காவிட்டால், மற்றும் உலகளாவிய மக்களாக மாறினால், தற்கொலைகளின் எண்ணிக்கையும், ஆன்லைன் மிரட்டல்கள் அதிகரிக்கக்கூடும்” என்று அவர் எச்சரிக்கிறார். “நீங்கள் எப்படி சமூகவலைதளங்களை உபயோகிக்கிறீர்கள்? என்று உங்களை நான் கேட்கின்றேன். கடந்த சில மணி நேரங்களாக நீங்கள் சமூக வலைதளங்களை உபயோகித்தது பற்றி சிந்தித்துப் பாருங்கள். எப்படி நீங்கள் அதனை உபயோகித்தீர்கள். அடுத்த சில மணி நேரங்களில் நீங்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது டிவிட்டர் கணக்குகளை லாக் –இன் செய்யும்போது, சிறியதாக நீங்கள் ஏதோ ஒன்று செய்தாலும் அது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதையும், உங்களை சுற்றி உள்ள பிறரையும் எப்படி பாதிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்” என்று முடித்தார் சோபி.