சாத்தான்குளம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிராம சபை கூட்டம் அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையில் திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம சபைக் கூட்டம் என டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டதை போலீசார் அகற்றினர். மேலும் நோய்த்தொற்று கால ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது