72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன என்பதை பற்றிய செய்தி.
➤உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்.
➤மொபைல் வழியாக இணையம் பயன்படுத்துவதில் முதலிடம்.
➤வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலிடம்.
➤அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம்.
➤மீன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
➤உலக அளவில் ஐடி துறையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
➤அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம்.
➤மின்வசதி இல்லாத கிராமங்களே இந்தியாவில் இல்லை.
➤ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை.
➤அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்.
➤திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்கள் - 3.7 லட்சம்.
➤2017ல் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.
➤2018ல் தொழில்முனைவோருக்கு ஏதுவான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் 30 இடங்கள் முன்னேற்றம்.
➤பணக்கார நாடுகளில் பட்டியலில் 7வது இடம்.
➤மிகப்பெரிய ராணுவம் கொண்ட நாடுகள் பட்டியலில் நான்காவது இடம்.
➤மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
➤உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசும் நபர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம்.