Home »
» ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! August 16, 2018
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி மரணமடைந்ததையடுத்து, அவரது உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கூட்ட நெரிசலில் சிக்கினார். இதுதொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில், ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Related Posts:
நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது" : தேசிய தண்ணீர் குழுமம் April 13, 2019
நதிநீர் இணைப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் பா ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாத்தியமில்லா திட்டங்களை கூறுவதாகவும் தேசிய த… Read More
நாட்டிலேயே அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி! April 15, 2019
source ns7.tv
நாட்டிலேயே அதிக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ள கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ர… Read More
"மத்தியில் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்" : குஷ்பு April 15, 2019
source ns7.tv
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரம், சுசீந்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்… Read More
கமல்ஹாசனுக்கு அனிதாவின் அண்ணன் பதில்! April 13, 2019
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சார வீடியோவுக்கு, மாணவி அனிதாவின் குடும்பத்தினர் பதில் அளித்துள்ளனர்.
நாடாளும… Read More
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! April 15, 2019
ns7.tv
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர அரசின் தக… Read More