மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து ஆகஸ்ட் 16ஆம் தேதி உத்தரவிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017 செப்டம்பர் மாதம் கைதாகி சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த வழக்கில் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆவணங்களை மோசடி செய்து திருமுருகன் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.
இதனையடுத்து, திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.