



நேற்று வரை இலட்சாதிபதியாக இருந்தவர்கள்
வீடு வாசல் துணிமனிகள் மற்றும் பொருளதாரத்தை இழந்து உதவிக்கரம் கேட்டு இன்று
நிவாரன முகாம்களில் தஞ்சம்.
நிவாரன முகாம்களில் தஞ்சம்.
நேற்று வரையிலும் நம்மைப்போலவே ஒரு அழகிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள்தான்.
புட்டும் கடலைக் கறியும் , மீனும் , மோட்டா அரிசியும் விதவிதமாய் சாப்பிட்டவர்கள்தான்
பிள்ளைகள் விரும்பி கேட்கின்ற ஆடைகளை வித விதமாய் வாங்கிக் கொடுத்தவர்கள்தான்
பிள்ளைகள் விரும்பிக் கேட்கின்ற ஸ்னாக்ஸ்களை , ஃடிபனில் வைத்து பள்ளிக்கு அனுப்பியவர்கள்தான்
ஆனால் இன்று வருவதைத்தான்/ தருவதைத்தான் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வீட்டுக்குள் ஓடி விளையாடிய குழந்தைகள் முகாமுக்குள் கிடக்க வேண்டிய நிலை,
விரும்பிய ஆடைகள் வாங்கித்தந்தவர்கள் , வருகின்ற ஆடையை வாங்குகின்ற நிலை,
சாப்பிட அடம்பிடித்த குழந்தைகள் இப்பொழுது பசியால் அழும் நிலையை அவர்கள் வாழ்க்கையில் கண்டிருக்கவே மாட்டார்கள்.
டைனிங் டேபிளில் இருந்து குடும்பமாய் சாப்பிட்டவர்கள்,
வரிசையில் நின்று சாப்பாடு வாங்கும் நிலையை கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.
காலம் காலமாய் ,
வருடக்கணக்காய்,
தலைமுறையாய்,
வெளிநாட்டில் தனித்து இருந்து சம்பாதித்தவைகள் எல்லாம்,
ஒரே நாளில் இயற்கை துடைத்து எறிந்து விட்டது...
இது நாம் பரிதாபப்படுவதற்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பாடம். மனிதர்களைச் சம்பாதிப்போம்.