வியாழன், 23 ஆகஸ்ட், 2018

​ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்தினால் மானநஷ்ட வழக்கு பாயும் - காங்கிரஸுக்கு ரிலையன்ஸ் எச்சரிக்கை நோட்டீஸ்! August 22, 2018

Image

இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையில் கடந்த 2015ல் கையெழுத்தாகியது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக பார்க்கப்படுகிறது. இது ஒரு இமாலய ஊழல் என்றும் ஒரு குறிப்பிட்ட நிறுவனமே இந்த ஒப்பந்தம் மூலம் பலனடையும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் இது முற்றிலும் பொய்யான, கற்பனையான ஒன்று என்று பாஜக மறுத்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் பலர் இது தொடர்பாக பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவல்கள் மூலம் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தப்படுகிறது என்றும் போட்டி நிறுவனங்களின் காழ்ப்புணர்சி இந்த விவகாரத்தில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனில் அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் டிபன்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் ஏரோஸ்டக்சர் நிறுவனம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அந்த எச்சரிக்கை நோட்டீஸ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப் சுர்ஜேவாலா, அசோக் சவான், சஞ்சய் நிருபம், அனுகிராஹ் நாராயன் சிங், உம்மன் சாண்டி, சக்திசின் கோஹில், அபிஷேக் மனு சிங்வி, சுனில் குமார் ஜாகர் மற்றும் பிரியங்கா சதுர்வேதி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
View image on TwitterView image on Twitter
Congress Spokesperson Jaiveer Shergill receives a cease & desist notice from Anil Ambani led Reliance Infrastructure, Reliance Defence & Reliance Aerostructure asking him to restrain from speaking on Rafale, failing which he will face legal consequences.
அதில், “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும், அரசியல்வாதிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்றதன்மையில் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு தக்கவகையில் பேசக்கூடாது. கருத்து சுதந்திரம் என்பது பொறுப்பற்றவகையில், அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்கள் மூலம் தவறாக வழிநடத்துவது, போன்றவற்றிகு அற்பமாக பேசுதல் போன்றவற்றிற்கு உரிமம் என்று அர்த்தமாகாது.

மேலும் அந்த நோட்டீஸில் காங்கிரஸ் தலைவர்களின் இந்த வெறித்தனமான பிரச்சாரம் திட்டமிட்ட ஒன்று என்றும் அவர்களின் அரசியல் லாபங்களுக்காக தங்கள் நிறுவனத்தின் மான்பை கெடுத்தும் வகையில் பேசிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிடில் தங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பை காக்கும் பொருட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.