வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

​உதகை: பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் முரிந்து விழுந்த ராட்சத மரங்கள்! August 17, 2018

Image

உதகையில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உதகையிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. இதனால்  கடநாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் சுமார் 4 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இந்த மரங்களை  தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனிடையே மின் கம்பிகளின் மீது மரங்கள் விழுந்துள்ளதால் முத்தொரை பாலடா மற்றும் கல்லட்டி, கடநாடு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.