ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. எனினும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு குறித்து, அறிவியல் பூர்வ ஆதாரங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் நிர்வாக ரீதியாக, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதித்தால், ஆவணங்ளை அழிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.