செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீது புகார் கூறுகிறார் ரஜினி August 14, 2018

Image

ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மீது தேவையற்ற கருத்துக்களை கூறியிருந்தால் ரஜினிகாந்த் நடமாடியிருக்க முடியுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் இறுதிச் சடங்கில் முதல்வர் பங்கேற்காதது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் என்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் இது போன்று பேசியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாகவும் திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கவே ரஜினி அதிமுக மீது புகார் கூறுவதாகவும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

Related Posts:

  • டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..! டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத… Read More
  • முருகனை ஈர்த்த மனிதநேயப் பணி! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள சின்னாண்டிக்குப்பம் என்ற பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வ… Read More
  • ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்? * பைபிளில் நபிகள் நாயகம் * நூலாசிரியர்.பீ.ஜைனுல்ஆபிதீன் அவர்கள்.  ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்… Read More
  • #‎முகலாய_சாம்ராஜ்ஜியம்‬! இந்தியாவில் சுமார் 800 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பெருமை முகலாய அரசர்களுக்கு உண்டு. முகலாய ஆட்சியில் தான் இந்த்தியாவில் மத நல்லிணக்கம் மேலோங்கி இருந… Read More
  • BOYCOTT ISRAEL !!   நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு டொலரும் ஒவ்வொரு பாலஸ்தீன குழந்தையின் உயிரை பறிக்கும் குண்டுகள் !!BOYCOTT ISRAEL !! … Read More