வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க உதவுமாறு கேரள முதல்வர் வேண்டுகோள்! August 17, 2018

Image

கேரளாவில், வரலாறு காணாத வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதி அளிக்க விரும்புவோர் முதல்வர் நிவாரண நிதி கணக்கில் செலுத்துமாறு தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

State Bank of India-வின் திருவனந்தபுரம் நகர கிளையில், 67319948232 என்ற வங்கிக் கணக்கு எண்ணில், வெள்ள நிவாரணத்திற்கான நிதி உதவியை வழங்கலாம் என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக நிதி உதவி வழங்குவோருக்கு உதவியாக, வங்கியின் IFSC Code மற்றும் SWIFT CODE ஆகியவற்றையும் கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Chief Ministers Distress Relief Fund

Account Number : 67319948232

Bank: State Bank of India

Branch: City Branch, Thiruvananthapuram

IFSC : SBIN0070028

PAN : AAAGD0584M

Account Type : Savings

SWIFT CODE : SBININBBT08