போக்குவரத்து விதிகளை மீறுவதால் நடக்கும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்பாடல் ஒன்றை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
தன்னார்வ இளைஞர் குழுவினர் தயாரித்த "எச்சரிக்கை கீதம்" என்ற குறும்பாடலை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களாகவே முன்வந்து நல்ல எண்ணத்துடன் போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை தயாரித்து வழங்கி இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பாடலை சமூக வலைதளங்கள், பொது இடங்களில் ஒளிபரப்புவதன் மூலம் சாலை விபத்துக்கள் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்திடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, குறும்பாடல் அல்லது குறும்படத்தை இயக்க இந்த குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.