
சிகரெட் பாக்கெட்டுகளில் ‘இன்றே புகைபிடிப்பதை விடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் இவை சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெற வேண்டும் எனவும் அத்துடன் புகைப் பழக்கத்தைக் கைவிட இலவச ஆலோசனை வழங்கும் தொலைப்பேசி எண்ணும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புகையிலைப் பொருட்களின் உறையில் 85% எச்சரிக்கை விளம்பரம் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.